/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோலம்பாளையத்தில் யானைகள் அட்டகாசம்
/
தோலம்பாளையத்தில் யானைகள் அட்டகாசம்
ADDED : பிப் 10, 2025 06:23 AM

மேட்டுப்பாளையம் : காரமடை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாவி அருகே துரைசாமி, 58, என்பவரது விளை நிலத்தில் நேற்று முன் தினம் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், அங்கேயே முகாமிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தின. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''விளைநிலங்களில் வனவிலங்குகள் முகாமிட்டுள்ளது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாலும் உரிய நேரத்திற்கு வனத்துறையினர் வருவதில்லை.
தமிழக அரசு வனவிலங்குகள் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும். வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் அகழிகளை மேலும் அகலப்படுத்துவதோடு, ஆழப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுக்குள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டும். வனத்துறையில் யானைகளை விரட்டும் பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், ''யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம்,'' என்றனர்.