/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
ரோட்டில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ரோட்டில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ரோட்டில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : நவ 11, 2024 06:57 AM

வால்பாறை : பொள்ளாச்சியிலிருந்து, 64 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை - ஆழியாறு செல்லும் ரோட்டில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் அவை ரோட்டில் முகாமிடுவதால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் பயணியர் யானைகள் நடமாட்டத்தால் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாாரிகள் கூறியதாவது:
வால்பாறை - ஆழியாறு இடையே யானைகள் நடமாட்டம் உள்ளது. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆழியாறு ரோட்டில் முகாமிடும் யானைகளை சுற்றுலாபயணியர் தொந்தரவு செய்யக்கூடாது. அதன் மிக அருகில் சென்று, செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.