UPDATED : அக் 09, 2026 10:00 PM
ADDED : அக் 09, 2026 07:42 PM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவி செல்லும் ரோட்டில், சாலையோர கடைகளை யானைகள் சேதப்படுத்தின.
வால்பாறை அடுத்துள்ள, கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் அதிரப்பள்ளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அருவிக்கு செல்லும் ரோட்டில், 20க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. நேற்று முன் தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், சாலையோர கடைகளை சேதப்படுத்தின.
சப்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதில், உண்ணிகிருஷ்ணன், பவித்திரன், குமாரியம்மாள், உஷாராஜன் ஆகியோரின் கடைகள் சேதமடைந்தன. யானைகள் சேதப்படுத்திய கடைகளை கேரள வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
