தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்


UPDATED : நவ 25, 2026 06:38 PM

ADDED : நவ 25, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:38 PM ADDED : நவ 25, 2026 06:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையத்தில், பொதுவுடமை தியாகிகள் நினைவகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மூன்றாவது தாலுகா மாநாடு நடந்தது. நிர்வாகிகள் செல்வராஜ், முருகன், நாகமாணிக்கம் தலைமை வகித்தனர் நடந்தது. மூத்த உறுப்பினர் துரைசாமி, சங்க கொடியேற்றினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் மகாலிங்கம், மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் பாலசுப்ரமணியன் அறிக்கை வாசித்தார். அதில், 17 பேர் கொண்ட கமிட்டி தலைவராக மகாலிங்கம், செயலாளராக பாலசுப்ரமணியன், பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் பேசினார்.

மாநாட்டில், தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில், தமிழகத்தை விட கூடுதலான உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குகின்றனர். தமிழகம் பல துறைகளில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க கூடிய நிதி உதவி தரவரிசை பட்டியலில், தமிழகம் எட்டாமிடத்தில் உள்ளது.

எனவே, அண்டை மாநிலமாக தெலுங்கானாவில் தற்போது வழங்கும் நிதி உதவி சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய், 6,000, கடும் மாற்றுத்திறனுக்கு, 10,000 ரூபாய்; படுக்கை மாற்றுத்திறனாளிகளுக்கு, 15,000 ரூபாய் வழங்குவதை போல, தமிழக அரசும் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டிச.,1ம் தேதி முதல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி செல்வி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us