/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரோட்டில் கட்டுமான பொருட்கள் குவிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 10:06 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டிலேயே கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டு இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைகின்றனர்.
பொள்ளாச்சி நகரில், வீடுகளின் கட்டுமானம் அதிகரித்து வருகிறது. இதனால், எந்தவொரு ரோட்டிலும் வாகனங்களின் இயக்கம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
அவ்வகையில், குடியிருப்பு பகுதிகளிலும் போக்குவரத்து வசதியாக தார் சாலை அமைக்கப்படுகிறது.
ஆனால், பல பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் ஜல்லி, செங்கல், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், ரோடுகளிலேயே குவித்து இருப்பு வைக்கப்படுகின்றன. கட்டுமானம் முடிய பல மாதங்களாகும் என்று தெரிந்தும், ரோடுகளிலேயே கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்படுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், குறுகலான ரோடுகளின் பெரும்பகுதியை கட்டுமானப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
புதிய கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கும் நகராட்சி அதிகாரிகள், ரோடுகளை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் குவித்து வைத்திருக்கும் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது: கட்டுமானத்தின் போது, கல், மணல், துாசி ஆகியவை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க, கட்டுமான பகுதியில் வலை அல்லது தடுக்கு அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களை ரோடுகளில் குவிக்கக்கூடாது.
பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால், விதிகளை மீறியே தனியார் கட்டட உரிமையாளர்களின் செயல்பாடு உள்ளது. நகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.