UPDATED : ஜூலை 19, 2026 04:36 PM
ADDED : ஜூலை 19, 2026 04:31 PM
செட்டிபாளையம்: செட்டிபாளையத்திலிருந்து பல்லடம் செல்லும் சாலையில், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவன குடோன் உள்ளது. இங்கு செட்டிபாளையத்தை சேர்ந்த மணிவேல், 32, வேலை பார்த்து வருகிறார். அரியலூர், தண்டலையை சேர்ந்த வேல்முருகன், 23, பார்சல்கள் மீது பெறுநர் முகவரி விபரங்களை ஒட்டும் பணி செய்து வருகிறார்.
கடந்த 6ல் மணிவேல், பொருட்களின் விபரங்களை ஆய்வு செய்தார். மொபைல்போன்கள், லேப்டாப், வயர்லெஸ், அனலாக் வாட்ச் புளூடூத், மொபைல் ஸ்டேண்டு உள்ளிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் குறைவதை கண்டார்.
வேல்முருகனிடம் விசாரித்தபோது, குறைந்த விலை பொருட்களை ஆர்டர் செய்து, கூடுதல் விலை பொருட்களை ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வந்ததும், அதன்மூலம் தேவையான பொருட்களை திருடியதும் தெரிந்தது. வேல்முருகனிடமிருந்து பொருட்கள் மீட்கப்பட்டன. மணிவேல் புகாரில் செட்டிபாளையம் போலீசார், வேல்முருகனை கைது செய்தனர்.
