/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்கள் வரவேற்பு
/
புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்கள் வரவேற்பு
ADDED : ஜன 05, 2026 05:31 AM

பொள்ளாச்சி: தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு வரவேற்று, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அலுவலக வளாகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

