ADDED : நவ 22, 2026 09:48 PM
கோவை: லாலிரோடு கோகுலகிருஷ்ணன், 33 தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று (நவ.,21) ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்துள்ளார். அப்போது ஊழியர்கள் தன்னை தாக்கியதாக கோகுலகிருஷ்ணனை புகார் கூறினார்.
காலி பாட்டில் கொடுத்து ரூ.10 கொடுக்குமாறு டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டேன். அவர்கள் பார் ஊழியர்களை அழைத்து என்னை அடித்தனர். மற்றவர்களும் காலி பாட்டில் கொடுத்து பணம் கேட்டால் என்ன செய்வது. உன்னால் வியாபாரம் பாதிக்கிறது என்று சொல்லி தாக்கியதாக, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் பார் ஊழியர்கள் ஜெயபாண்டியன், சுந்தரம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், கோகுலகிருஷ்ணன் டாஸ்மாக் மதுக்கடையில் பாட்டிலை கொடுப்பதற்கு பதிலாக, பார் ஊழியர்களிடம் கொடுத்து பிரச்னை செய்துள்ளார். இதற்கு முன்பும் அவர் மதுபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். அந்த கோபத்தில் தாக்கியுள்ளனர். இருவரை கைது செய்து பெயிலில் விடுவித்துள்ளோம் என்றனர்.
