/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டம்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
காட்டம்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 18, 2024 10:39 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு - காட்டம்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினர்.
கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோட்டில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வழியில் அதிக கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், பிற வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோட்டில் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் முதல் கருணாபுரி பிரிவு வரை இருபக்கமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சில இடங்களில் நெடுஞ்சாலைதுறைக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தது உறுதியானது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினர்.