இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி இன்று நடக்கிறது
இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி இன்று நடக்கிறது
ADDED : ஜூன் 20, 2026 04:09 AM
கோவை:'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும், இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று (ஜூன் 20ம் தேதி) நடக்கிறது.
ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி ரோட்டில் உள்ள மாநகராட்சி கலையரங்கில், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கோ-ஸ்பான்சராக இணைந்துள்ளது.
தங்கள் கட் ஆப் மதிப்பெண்களுக்கு, எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியில் கிடைக்கும்; ஆன்லைன் கவுன்சிலிங் புதிய நடைமுறைகள் என்னென்ன; எப்படி கல்லுாரியை தேர்வு செய்வது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
'இன்ஜி., படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில், இந்த ஆண்டு உங்கள் கட்-ஆப் மதிப்பெண்கள்; நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம் குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி விளக்குகிறார்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார்.
குறிப்பாக ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், 'புரொவிஷனல் அலாட்மென்ட்' பெறுதல் குறித்து பேசுகிறார். இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.
பிரகாசமான எதிர்காலத்துக்கு திட்டமிடும் மாணவர்களும், பெற்றோரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி இது. தவற விட்டு விடாதீர்கள்!
