/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் மின்கட்டணத்தை குறைக்க பொறியாளர் ஐடியா
/
வீட்டில் மின்கட்டணத்தை குறைக்க பொறியாளர் ஐடியா
ADDED : டிச 18, 2025 05:19 AM
மேட்டுப்பாளையம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், டிச.,14ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை, தேசிய மின் சக்தி சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது.
நேற்று மேட்டுப்பாளையத்தில் மின்சார வாரியத்தின் சார்பில், மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவை வடக்கு வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
வீட்டை காற்று, வெளிச்சத்துடன் அமைத்தால், மின் ஒளிக்கு பதிலாக, சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்தலாம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால், நாட்டின் மின்சார தேவை குறையும். மின் கட்டண செலவும் மிச்சமாகும்.
அங்கீகாரம் பெற்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். இரவு முழுவதும் மின்விளக்கு எரிய வேண்டிய அவசியமான இடத்தில், குறைந்த வாட் எல். இ.டி., பல்புகளை பயன்படுத்த வேண்டும்.
குளிர்சாதன பெட்டிகளை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்க வேண்டும். பேனில் சாதாரண ரெகுலேட்டருக்கு பதிலாக, எலக்ட்ரானிக் ரெகுலேட்டரை பயன்படுத்தி, மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பேரணியில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மின்சார வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை, கையில் ஏந்தி வந்தனர். மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் சத்யா நன்றி கூறினார்.

