/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் கணக்கெடுப்பு
/
ஒரே ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் கணக்கெடுப்பு
ADDED : ஜன 02, 2024 11:24 PM
பெ.நா.பாளையம்;லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட போலீசாரை இடம் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
லோக்சபா தேர்தல் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் போலீசார் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
மேலும், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், அவர்கள் பணிகள் குறித்தும் மாவட்ட போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீசார் இம்மாதம், 31ம் தேதிக்குள் அவர்களை வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.