/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையோடு தீயில் கருகும் மரங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
/
குப்பையோடு தீயில் கருகும் மரங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
குப்பையோடு தீயில் கருகும் மரங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
குப்பையோடு தீயில் கருகும் மரங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
ADDED : ஏப் 14, 2025 05:29 AM

சூலுார், : ஊராட்சிகளில் குப்பைக்கு தீ வைக்கும் செயல்களால், மரங்கள் கருகுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சூலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில், பல்வேறு சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மரங்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். முத்துக்கவுண்டன்புதுார், அரசூர், கரிச்சிபாளையம், வாகராயம் பாளையம், கிட்டாம்பாளையம், கலங்கல் உள்ளிட்ட பகுதிகளில் குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமாரிக்கப்படுகின்றன.
பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்து மரங்களாக உயர்ந்து நிற்கின்றன.
தற்போது கோடை காலம் என்பதால், போதுமான தண்ணீர் இன்றி மரங்கள் காய்ந்துள்ளன.
இந்நிலையில், சமூக அக்கறை இல்லாத ஒரு சிலர், மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் குப்பையை கொட்டி செல்கின்றனர். இதை தடுக்க முடியாமல் சமூக ஆர்வலர்களும் திணறி வருகின்றனர். குவிந்திருக்கும் குப்பைக்கு வழிப்போக்கர்கள் தீ வைத்து விடுவதால், மரங்களும் தீக்கிரையாகின்றன. இதனால், சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
ஊரும், மண்ணும் வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதை புரிந்து கொள்ளாத சிலர், குப்பைக்கு தீ வைத்து மரங்களையும் தீயுக்கு இரையாக்குகின்றனர். கணியூரில் ரோட்டை ஒட்டி வளர்ந்திருந்த மரங்கள் தீயால் கருகி விட்டன.
நாங்களும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மரங்களை பாதுகாக்க முடியாமல் திணறி வருகிறோம். ஊராட்சி நிர்வாகங்கள் மரங்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.