/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்களுக்கு விரைவில் சுற்றுச்சூழல் தணிக்கை; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பேச்சு
/
தொழில்களுக்கு விரைவில் சுற்றுச்சூழல் தணிக்கை; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பேச்சு
தொழில்களுக்கு விரைவில் சுற்றுச்சூழல் தணிக்கை; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பேச்சு
தொழில்களுக்கு விரைவில் சுற்றுச்சூழல் தணிக்கை; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பேச்சு
ADDED : டிச 18, 2024 10:52 PM

கோவை; தொழில் நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் விரைவில் சுற்றுச்சூழல் தணிக்கையும் அமலுக்கு வரும்; தொழில் நிறுவனங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், என, மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா தெரிவித்தார்.
கோவை சின்னவேடம்பட்டியில், உதயம் சான்று பதிவு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னவேடம்பட்டி தொழில்கள் சங்கத்தின் தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் கணேஷ்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகசிவா பேசியதாவது:
தொழில் நிறுவனங்களை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் மாவட்ட தொழில் மையம் உதவும். கோவை மாவட்ட தொழில் மையத்தில் 6 வகையான கடனுதவிக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். தொழிற்சாலைகளுக்கான கட்டுமான அனுமதியை, ஒற்றை சாளர முறையில் பெற்றுத்தருகிறோம். மானியத்திட்டங்கள், ரூ.1.50 கோடி வரை தருகிறோம்.
செலவை மிச்சப்படுத்தப்படும் தர நிர்ணய சான்று, ஆற்றல் தணிக்கை, காப்புரிமை பதிப்புக்கான கட்டணங்களில், சலுகையையும் பெற்றுத் தருகிறோம்.
எதிர்காலத்தில் தொழில்களுக்கு சுற்றுச்சூழல் தணிக்கையும் வர வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளும், அமலுக்கு வரும். அதற்கு தொழில் நிறுவனங்கள் தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், டான்சியா துணைத்தலைவர் சுருளிவேல், கொசிமா தலைவர் நடராஜன், டாமியா தலைவர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.