/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 08, 2025 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை ; ஆனைமலை அருகே, கோட்டூர் அரசுப்பள்ளியில், உலக சுற்றச்சூழல் தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆனைமலை அருகே, கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது.
பொருளியல் ஆசிரியர் செந்தில்குமார், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், விழா ஏற்பாட்டினை செய்து இருந்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் கவியரசு, கல்வி, தாய்பால் குறித்து கவிதை வாசித்தார்.