/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் இ.பி.எஸ்.,க்கு இன்று பாராட்டு விழா

ADDED : பிப் 09, 2025 12:30 AM
அன்னுார் : அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில், அன்னுாரில் இன்று நடக்கும் பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்கி, நிதி ஒதுக்கி, செயல்படுத்திய முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் மூன்று மாவட்ட விவசாயிகள் சார்பில், அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில் இன்று மதியம் 3:00 மணிக்கு பாராட்டு விழா மாநாடு நடக்கிறது.
இதில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாட்டு மாடுகள் கண்காட்சி நடக்கிறது. 60 ஆண்டு கால போராட்டப் பதிவுகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.