/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல்
/
கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 12, 2024 12:09 AM

கோவை:கோவை சோமையனுாரில் மண்டல சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். காவேரி குழும நிறுவன தலைவர் வினோத்சிங் ரத்துார், நஞ்சுண்டாபுரம் பஞ்சாயத்து தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில் இன்ஜினியர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவில் கிராமிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாட்டுபுற இசை, மாட்டுவண்டி பயணம், உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், செயலாளர் தாமோதரசாமி பொருளாளர் சோமசுந்தரம், முன்னாள் தலைவர் ஜெயவேல், முன்னாள் பொருளாளர் பழனிசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.