/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
/
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
ADDED : அக் 12, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் சி.எஸ்.ஆர். நிதியில் வழங்கப்பட்டது.
தேக்கம்பட்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில், 2 கணினிகள், 50 சேர்கள், யூ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இது அரசு பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஐ.டி.சி., நிறுவன தலைமை நிர்வாகி முரளி, வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.