தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தப்பிய கைதி சேலத்தில் கைது 

 தப்பிய கைதி சேலத்தில் கைது 

 தப்பிய கைதி சேலத்தில் கைது 


ADDED : ஜூன் 14, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி, சேலத்தில் கைது செய்யப் பட்டார்.

ஆந்திராவை சேர்ந்த பிம்முடு அஜித்குமார், ஆன்லைன் இணையதளங்களில் தகவல்களை பயன்படுத்தி, கார், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வது போன்று, முன்பணம் பெற்றுக்கொண்டு தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 18 வழக்குகள் பல்வேறு இடங்களில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திராவில் சிறையில் இருந்து தப்பி, திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மீண்டும் ஆடம்பர வாழ்க்கைக்காக, இருவரிடம், கார் விற்பனை செய்வது போல் பல லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். புகாரில், திருப்பூர் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, கழிவறை செல்வதாக கூறி,அங்கிருந்து தப்பினார். தனிப்படை தேடுதலில், சேலத்தில் இருந்தது கண்டுபிடித்து கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us