ADDED : ஆக 23, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை சார்பில், கிராமப்புற மக்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, போட்டிகள் நடந்து வருகின்றன.
கோவை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது. எம்.எல்.ஏ., கனிமொழி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் வாசுகி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. த்ரோபால் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இறுதிப்போட்டிகள், செப்., 6ம் தேதி, ஆதியோகி வளாகத்தில் நடக்க உள்ளன.
