/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியல! வால்பாறையில் தினமும் தொடரும் சிக்கல்
/
நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியல! வால்பாறையில் தினமும் தொடரும் சிக்கல்
நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியல! வால்பாறையில் தினமும் தொடரும் சிக்கல்
நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியல! வால்பாறையில் தினமும் தொடரும் சிக்கல்
ADDED : செப் 15, 2025 09:41 PM

வால்பாறை; வால்பாறை நகரில், அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளதால், வாகன நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.
ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது. இதனால், வால்பாறை மக்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
குறிப்பாக, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழித்தடம், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேபோல், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், ஆக்கிரமிப்பு அதிகரிப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாகி விட்டது.
மாற்று ஏற்பாடு! வால்பாறையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கனரக வாகனங்கள் ரொட்டிக்கடை, பழைய வால்பாறை வழியாக இயக்க வேண்டும். வால்பாறை நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் வளையல் கடைவீதி வழியாக செல்ல வேண்டும்.
சுற்றுலா வாகனங்கள் நிறுத்த ஏற்கனவே அறிவித்தபடி, அண்ணாதிடலை விரிவுபடுத்தி, 'பார்க்கிங்' வசதியுடன் கூடிய ஸ்டேடியம் அமைக்க வேண்டும்.
வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டை விரிவுபடுத்தி, மையத்தடுப்பு அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.