/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டேப்' இருந்தும் பயனில்லை; பள்ளி ஆசிரியர்கள் திணறல்
/
'டேப்' இருந்தும் பயனில்லை; பள்ளி ஆசிரியர்கள் திணறல்
'டேப்' இருந்தும் பயனில்லை; பள்ளி ஆசிரியர்கள் திணறல்
'டேப்' இருந்தும் பயனில்லை; பள்ளி ஆசிரியர்கள் திணறல்
ADDED : அக் 10, 2025 12:10 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில், 'பிராட்பேன்ட்' சேவை வழங்கப்பட்டும் முறையாக பயன்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 305 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், 'ஸ்மார்ட் போர்டு' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள் அனைவருக்கும், புதிய 'டேப்' வழங்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் சுய விபரங்களை, 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்வது, குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த வீடியோ காட்சிகளை காண்பிப்பது என, கல்வி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கான 'பிராட்பேண்ட்' சேவை, முறையாக இல்லாததால் ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்தாண்டு, அனைத்து ஆசிரியர்களுக்கும் 'டேப்' வழங்கப்பட்டது. இதற்கான பி.எஸ்.என்.எல். டேட்டா இணைப்புக்காக, 'சிம்' வழங்கப்பட்டு, ஆண்டுக்கு 1,100 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த தொகையைப் பயன்படுத்தி எந்த 'டேட்டா' சேவையை பெறுவது என, குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது, 'வை-பை' வசதிக்காக 'பிராட்பேண்ட்' பைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் வை-பை வசதி கிடைப்பதில்லை.
இதுஒருபுறமிருக்க, 30க்கு குறைவான மாணவர்களை உள்ளடக்கி பள்ளிகளுக்கு 'பிராட்பேண்ட்' இணைப்பு வழங்கப்படாததால், ஆசிரியர்கள் சொந்த மொபைல்போன்களை பயன்படுத்துகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணாததால், ஆசிரியர்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.