/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மசாஸ்தா கோவிலில் சபரிமலைக்கு மாலை
/
தர்மசாஸ்தா கோவிலில் சபரிமலைக்கு மாலை
ADDED : நவ 18, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததையொட்டி, அய்யப்பன் கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து, தங்கள் விரதத்தை துவங்கினர்.
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவு பகுதியிலுள்ள, தர்மசாஸ்தா கோயிலில் அதிகாலை ஆராதனை, நெய் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. 200க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு, கோயில் மேல்சாந்தி சசி நம்பூதிரி மாலை அணிவித்தார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

