ADDED : செப் 15, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கோவை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவிநாசி ரோட்டிலுள்ள அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க. புறநகர், மத்திய மாவட்ட கழக செயலாளர் செ.ம.வேலுசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அ.தி.மு.க.அலுவலகம் அமைந்துள்ள இதயதெய்வம் மாளிகையில் கட்சி கொடியேற்றினர். அலுவலகத்தில் அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து, மலர்களை துாவி மரியாதை செய்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜெயராம், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
