/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் முட்டிக்கோ... மோதிக்கோ! 2 இடத்தில் மாற்று ஏற்பாடு தேவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் விபத்து அபாயம் 2 இடத்தில் மாற்று ஏற்பாடு செய்யலாமே

ADDED : ஏப் 14, 2025 07:11 AM

கோவை: கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில், இரு இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளில், போக்குவரத்து நெருக்கடிகளை தவிர்க்க, தானியங்கி சிக்னல்கள் அகற்றப்பட்டு, 'யூ டேர்ன்' வசதி செய்யப்படுகிறது.
பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சிரமத்தை ஏற்படுத்திய இடங்களில் மட்டும், சிக்னல் நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதில், வடகோவை சிந்தாமணியில் இருந்து வரும் வாகனங்கள், தேவாங்கப்பேட்டை பள்ளிக்கு திரும்புவதற்கான, 'யூ டேர்ன்' தடை செய்யப்பட்டுள்ளது; சற்றுத்துாரம் தள்ளிச் சென்று, சிரியன் சர்ச் பகுதியில் திரும்பி வர வேண்டும்.
அவ்வாறு திரும்பும்போது, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதும் அபாயம் இருக்கிறது. இவ்விடத்தை வாகனங்கள் மிகவும் கவனமாக கடக்க வேண்டியுள்ளது; இல்லையெனில், வாகனங்கள் விபத்தை சந்திக்கின்றன. இப்பகுதியில், 'யூ டேர்ன்' வாகனங்களுக்கு பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல், தேவாங்கபேட்டை பள்ளி ரோட்டில் வருவோர், சிக்னலில் காத்திருந்து அவிநாசி ரோடு மேம்பாலத்துக்குச் செல்ல விரும்பினால், சிக்னலில் காத்திருந்து வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். அச்சமயத்தில், கிக்கானி ரவுண்டானாவில் இருந்து வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இவ்விரு பகுதிகளிலும் போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினரும் கள ஆய்வு செய்து, விபத்தில்லா பயணத்துக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.