தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வட கிழக்கு பருவ மழையில்  ஒவ்வொரு சொட்டும் முக்கியம்

வட கிழக்கு பருவ மழையில்  ஒவ்வொரு சொட்டும் முக்கியம்

வட கிழக்கு பருவ மழையில்  ஒவ்வொரு சொட்டும் முக்கியம்


ADDED : செப் 25, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. சிறுவாணியில் 7, அடிவாரத்தில் 10 மி.மீ. பதிவானது. குடிநீர் தேவைக்கு 6 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. அணையில் நேற்று 30.57 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை.

இந்நிலையில், 28க்கு பின், வடகிழக்கு பருவ மழைக்கு முந்தைய இடி மழை காலம் துவங்கும் என, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகிறார்.

அவர் கூறியதாவது:

பாலக்காட்டு கணவாய் மேற்கு எல்லை பகுதிகளில் ஆங்காங்கே துாறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் படிப்படியாக வேகம் பிடித்து, அக்.முதல் வாரத்தில் பரவலாக பெய்யக்கூடும். 

அடுத்த 3 மாதங்களில் நாம் சேமிக்கும் ஒவ்வொரு சொட்டு மழைநீரும், 2027ல் பிப்ரவரி –- மே மாதங்களில் வரவிருக்கும் சூப்பர் எல் நினோ கால கட்டத்தை சமாளிக்க உதவும்.

அதனால் மழை பெய்யும்போது சேமித்துக் கொள்ள வேண்டும். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

கோடையில் கண்டிப்பாக தண்ணீர் தட்டுப்பாட்டை கோவை சந்திக்கும். எனவே, மழைநீரை நிலத்தடி நீர் தொட்டிகளில் சேகரித்து வையுங்கள்.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனரை சந்தித்து, வடகிழக்கு பருவ மழை குறித்தும், அடுத்தாண்டு ஏற்பட இருக்கும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும் தெரிவித்தோம். மழை நீர் சேகரிப்பை முன்னெடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us