சிறந்த வழிகாட்டுதல், பயிற்சி மாணவர்களுக்கு எதிர்காலம்
சிறந்த வழிகாட்டுதல், பயிற்சி மாணவர்களுக்கு எதிர்காலம்
UPDATED : ஜூன் 19, 2026 08:59 PM
ADDED : ஜூன் 19, 2026 05:21 PM
ரங்கநாதன்- ராஜேஸ்வரி அறக்கட்டளையின் கீழ், ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி, மருந்தியல் கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மை பங்கு வகிக்கின்றன. தன்னாட்சி அந்தஸ்து மற்றும் 'நாக்' அங்கீகாரத்துடன் விளங்கும் இக்கல்லுாரிகள், மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கல்விச் சேவை வழங்கி வருகின்றன.
சிவில் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்று தாளாளர் முருகேசன், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறை மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர். இவர், மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், புதுடெல்லி ஐ.எஸ்.டி.இ., அமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். மற்றொரு தாளாளரான தமிழரசி, அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலையில், 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றிய கல்விப் பணி அனுபவம் வாய்ந்தவர்.
பொறியியல் கல்லுாரியில், சிவில் என்ஜினீயரிங், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் மற்றும் ஏ.ஐ., மெசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், ஐ.டி., ஆகிய படிப்புகளும், மருந்தியல் கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரிகளில், பி.எஸ்சி., டி.பார்மம், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பரந்த நுாலகம், கணினி, இயற்பியல், வேதியியல், எந்திரவியல், மின்னியியல் மற்றும் மொழியியல் போன்ற நவீன ஆய்வகங்கள் வாயிலாக, மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன், எண்ணற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
