/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மொபைல் அதிகம் பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்'
/
'மொபைல் அதிகம் பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்'
'மொபைல் அதிகம் பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்'
'மொபைல் அதிகம் பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்'
ADDED : செப் 30, 2025 12:37 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது. பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இதில், கோவை என்.சி.சி. தலைமை அலுவலக கர்னல் சுவாமி பேசியதாவது:
மாணவர்களாகிய நீங்கள், 10 துறைகளை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். ஓராண்டிற்கு பிறகு, எந்தத் துறைக்கு செல்ல, தகுதியாக்கி கொண்டிருக்கின்றோம் என்று ஆராய வேண்டும். நாளடைவில் உங்களுக்கான ஒரு துறையை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள். அவ்வாறு செய்யத் தொடங்கும் போது, நீங்கள் சாதனை புரிவதற்கான, பாதையில் சென்று கொண்டிருப்பீர்கள் என்பது புரியத் தொடங்கும்.
மொபைல் போன் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால், தன்னம்பிக்கை போய்விடும், மூளை வளர்ச்சி பாதிக்கும். எனவே மொபைல் போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.- இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளியின் செயலர் கவிதாசன், முன்னாள் மாணவர் கவுதம் ராம், மாணவி தீபிகா ஆகியோர் பேசினர். பள்ளி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.