ADDED : ஜூன் 18, 2026 08:08 AM
அ நிறம் | அளவு
சூலுார்: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க, கோவை மாவட்ட கிளைக்கு, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. மாநில தலைவர் மதுரம், தேர்தல் அதிகாரிகள் முனியப்பன், பாலு முன்னிலையில், மாவட்ட தலைவராக கணேசன், துணைத்தலைவர்களாக சுபைதா பேகம், தண்டபாணி, கீதா ஆகியோரும், மாவட்ட செயலாளராக கிரிதர பிரசாத், பொருளாளராக ரங்கராஜ் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இரு அமைப்பு செயலாளர்கள், ஒரு தலைமை நிலைய செயலாளர், இரு துணை செயலாளர்கள், ஒரு தலைமை நிலைய செயலாளர், ஒரு மகளிரணி செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
