ADDED : செப் 20, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில், வள்ளுவர் நகரவைத் துவக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் தலைமை வகித்து வரவேற்றார். மேற்பார்வையாளராக, ஆசிரியர் பயிற்றுனர் சத்யா பங்கேற்றார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரெஜினா பானு, துணை தலைவராக சுஹாசினி, கல்வியாளராக ஜெயராமன் உட்பட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துரத்தினம் பேசினார். தலைமை ஆசிரியை உறுதிமொழி வாசிக்க, மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிசார் அகமது நன்றி கூறினார்.
