UPDATED : அக் 13, 2026 10:06 PM
ADDED : அக் 13, 2026 09:50 PM
அ நிறம் | அளவு
கோவை: உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, செம்மொழி பூங்காவில் நேற்று தீயணைப்புத்துறை மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.
கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
