/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன வேகம் கட்டுப்படுத்த கேமரா பொருத்த எதிர்பார்ப்பு
/
வாகன வேகம் கட்டுப்படுத்த கேமரா பொருத்த எதிர்பார்ப்பு
வாகன வேகம் கட்டுப்படுத்த கேமரா பொருத்த எதிர்பார்ப்பு
வாகன வேகம் கட்டுப்படுத்த கேமரா பொருத்த எதிர்பார்ப்பு
ADDED : டிச 23, 2024 10:13 PM
பொள்ளாச்சி; அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க நெடுஞ்சாலையில் கேமரா பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி - கோவை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 43 கி.மீ., துாரம் நீள்கிறது. பிரதான வழித்தடமாக இருப்பதால், தினமும், பஸ், கனரக வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக இயக்கப்படுகின்றன.
தற்போது, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இச்சாலையில் பகல் மற்றும் இரவு வாகன போக்குவரத்து நிறைந்தே காணப்படுகிறது. அவ்வபோது, வாகன ஓட்டுநர்களின் அஜாக்கிரதை, அதிவேகம், போக்குவரத்து விதிமீறல் காரணமாக, அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்துகளால் உயிர் பலியும் ஏற்படுகிறது. இதனை தடுக்க, விதிமீறல் வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில், நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
வாகனங்கள், வேகமாக இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய வேகத்தின் அளவு குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க நெடுஞ்சாலையோரம் மருத்துவ கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாகனங்கள் ஓட்டும்போது, மொபைல்போன் பேசுவது, அருகில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவது, குறிப்பிட்ட கி.மீ., வேகத்துக்கு மேல் வாகனங்கள் இயக்குதல் என, போக்குவரத்து விதிமீறலைக் கண்டறிந்து அபராதம் விதிக்க, ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.