ADDED : செப் 15, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: ‘புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்,’ என, முன்னாள் ஊராட்சித்தலைவர், எம்.பி.,க்கு மனு கொடுத்தார்.
போடிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியிடம் கொடுத்த மனுவில், ‘போடிபாளையத்தில் கடந்த, ஏழு ஆண்டுகளாக நுாலக கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. தற்போது, நுாலக கட்டடத்தை காலி செய்து தனியார் வீட்டில் ரேஷன் கடை செயல்படுகிறது. எனவே, எம்.பி., தொகுதி நிதியில் இருந்து புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
