/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் பார்வையாளர் நேரம் நிர்ணயிக்க எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் பார்வையாளர் நேரம் நிர்ணயிக்க எதிர்பார்ப்பு
பள்ளிகளில் பார்வையாளர் நேரம் நிர்ணயிக்க எதிர்பார்ப்பு
பள்ளிகளில் பார்வையாளர் நேரம் நிர்ணயிக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 28, 2025 11:41 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில் பார்வையாளர்கள் நேரத்தை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை என மொத்தம், 437 பள்ளிகள் உள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம், 97 பள்ளிகளும் உள்ளன.
கல்வித்தரம், கட்டமைப்பு, விளையாட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டே பெற்றோர் பலரும் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முற்படுகின்றனர். இருப்பினும், பல அரசு பள்ளிகளில், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, புகார் எழுகிறது.
அரசுப் பள்ளிகளுக்கு பகல் மற்றும் இரவு பாதுகாவலர் நியமனம் கிடையாது. அவ்வபோது, பலரும், முன் அனுமதி பெறாமலேயே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் சிலரோ, நேராக, வகுப்பறைக்குச் சென்று, தங்கள் குழந்தைகளைச் சந்திந்து, திரும்புகின்றனர். எனவே, தனியார் பள்ளிகளைப் போலவே, அரசு பள்ளிகளிலும் பார்வையாளர் நேரத்தை நிர்ணயம் செய்ய கோரிக்கை எழுந்தள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'அரசு பள்ளிகள்தோறும், பாதுகாவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பெற்றோர்கள் மற்றும் பிறர், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சந்திக்கும் வகையில், பார்வையாளர்கள் நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.