தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரத்து குறைவால் ஏற்றுமதி ‘டல்’

வரத்து குறைவால் ஏற்றுமதி ‘டல்’

வரத்து குறைவால் ஏற்றுமதி ‘டல்’


ADDED : செப் 23, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: ஊட்டி உருளைக்கிழங்குகளின் வரத்து குறைந்துள்ளதால், ஏற்றுமதி சரிவை சந்துள்ளது.

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. தவிர, நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கமும் உள்ளது. மண்டிகள் மற்றும் விற்பனை சங்கத்துக்கு கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள், தரம் பிரித்து ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் நிசார் கூறியதாவது:

ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து மற்றும் சீசனுக்கு ஏற்றார் போல் விலை இருக்கும். 45 கிலோ எடை கொண்ட மூட்டை, சங்கத்தில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.4,600 வரை விற்பனையாகி உள்ளது. செப்., – அக்., மாதம் சீசன் நேரம், 3,000 முதல் 4,000 மூட்டைகள் லோடு வர வேண்டும். தற்போது 1,000 முதல் 2,000 வரை தான் லோடு வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் பெரும்பாலான விவசாயிகள், ஊட்டி உருளைக்கிழங்குகளை பயிர் செய்யவில்லை. மண்ணின் தன்மையை தக்க வைக்க மாற்று பயிர்களை பயிரிட்டதும், பருவமழை பொய்த்ததும் ஒரு காரணம். இதனால், வரத்து குறைந்தது. 30 முதல் 40 சதவீதம் வரை ஏற்றுமதி குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,040 வரை விற்பனை ஆனது. 1,800 மூட்டைகள் மட்டுமே லோடு வந்தன.

இவ்வாறு, அவர் கூறினார்.----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us