/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில உடைமைகள் பதிவு சரிபார்த்து இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு; வேளாண் உதவி இயக்குனர் தகவல்

ADDED : ஜூன் 23, 2025 10:41 PM
ஆனைமலை; 'ஆனைமலை வட்டாரத்தில், 'அக்ரி ஸ்டேக்' இணையதளத்தில், விவசாயிகளின் நில உடைமைகள் பதிவு சரிபார்த்து இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,' என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை வருமாறு:
ஆனைமலை வட்டாரத்துக்கு உட்பட்ட, கிராமம் வாரியாக ஒதுக்கீடு செய்துள்ள மகளிர் தன்னார்வலர்கள், இ - சேவை மையங்கள், உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு 'அக்ரி ஸ்டேக்' செயலியில், விவசாய நில உடமை சர்வே எண், ஆதார் அட்டை எண் இணைக்கலாம்.
விவசாய நில உடமை சர்வே எண் (கூட்டுப்பட்டா, ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலம் வைத்திருப்போர்) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண் ஆகியவை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள, வரும், 5ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக வேளாண் உழவர் நலத்துறை நீட்டிப்பு செய்துள்ளது.
இதனை உள்ளீடு செய்தவுடன், அப்போதே மத்திய அரசின் அடையாள எண் உருவாகும். அந்த எண்ணை விவசாயிகள் மொபைல்போனில் பெற்றுக்கொள்ளலாம்.வருங்காலங்களில் அரசின் அனைத்து விவசாயம் மற்றும் இதர துறைகள் தொடர்பான திட்டங்களில், நிதி உதவி பெறும் போது இந்த அடையாள எண் மட்டுமே போதுமானது.
பிற ஆவணங்கள் ஒவ்வொரு முறையும் தேவையில்லை என்பதால், பதிவு மற்றும் சரிபார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.விவசாயிகள் 100 சதவீத பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு வேளாண்துறையை அணுகலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.