/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்
/
லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்
ADDED : அக் 08, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ரேஸ்கோர்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில், சிரியன் சர்ச் சாலையில் உள்ள சேவா நிலையத்தில் கல்வி கற்கும் ஏழை குழந்தைகளுக்கு, கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. உலக சேவை தினத்தை முன்னிட்டு, ரேஸ்கோர்ஸ் லயன்ஸ் கிளப் இக்கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
லயன்ஸ் கிளப் கவர்னர் தினகரன், சாந்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் அனில்சிங், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமணன் ஆகியோர் பங்கேற்றனர். லோட்டஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள், குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.