/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்ந்து முயற்சி செய்தால் தோல்வியும் வெற்றியாக மாறும்
/
தொடர்ந்து முயற்சி செய்தால் தோல்வியும் வெற்றியாக மாறும்
தொடர்ந்து முயற்சி செய்தால் தோல்வியும் வெற்றியாக மாறும்
தொடர்ந்து முயற்சி செய்தால் தோல்வியும் வெற்றியாக மாறும்
ADDED : செப் 23, 2024 11:08 PM
மேட்டுப்பாளையம் : வெற்றியும், தோல்வியும் நிலையானது அல்ல. தொடர்ந்து முயற்சி செய்தால், தோல்வியும் வெற்றியாக மாறும், என, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி செயலாளர் கவிதாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில், தென் மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன.
வருகிற, 26ம் தேதி வரை நடைபெறும் விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவுக்கு, பள்ளி செயலர் கவிதாசன் நிகழ்ச்சிக்கு தலைமை வைத்து, போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது:
இந்திய நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை, பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக, ஆண்டு தோறும், தெற்கு மண்டல ஹாக்கி போட்டிகள், கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டில் வெற்றி, தோல்வி இருக்கும். ஆனால் அவை நிலையானது அல்ல. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால், தோல்வியும் கூட, வெற்றியாக மாறும்.
வெற்றி தலைக்குள் சென்றால், அது தலைகனமாக மாறிவிடும். தோல்வி இதயத்துக்குள் சென்றால், மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். வெற்றி பெற்றால் பணிவு அவசியம். தோல்வி ஏற்பட்டால் பொறுமை அவசியம். எதிர்ப்பு வந்தால் துணிவு வேண்டும். எனவே விளையாட்டில் தினமும் பயிற்சி செய்தால் தான், உயர்ந்த லட்சியத்தை அடைய முடியும். இவ்வாறு பள்ளி செயலாளர் பேசினார்.
பள்ளியின் டாக்டர் முருகேசன், விளையாட்டின் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார். பள்ளி கல்வி ஆலோசகர் கணேசன், மாணவர்களை வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி துணை இயக்குனர் அனிதா, பயிற்சியாளர் யோகானந்த் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.