/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் வாகனத்தில் 'க்யூஆர்' கோடு தேவை
/
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் வாகனத்தில் 'க்யூஆர்' கோடு தேவை
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் வாகனத்தில் 'க்யூஆர்' கோடு தேவை
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் வாகனத்தில் 'க்யூஆர்' கோடு தேவை
UPDATED : மார் 16, 2024 05:42 AM
ADDED : மார் 16, 2024 12:00 AM

கோவை;லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், பணம் கையாள்வது தொடர்பாக, வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
அதில், தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
வங்கி கணக்கில் இருந்து சந்தேகப்படும்படியாக, கடந்த இரு மாதங்களில், வங்கி கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்திருந்தாலோ அல்லது எடுத்திருந்தாலோ, அதைப்பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
ஒரு கணக்கில் இருந்து பலருக்கு ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் பணம் 'டிரான்ஸ்பர்' செய்தால், அதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.
சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணம் பரிவர்த்தனை செய்வது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக கருதப்படும். 10 லட்சம் ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்தாலோ அல்லது கணக்கில் இருந்து எடுத்தாலோ, வருமான வரித்துறையின் நோடல் ஆபீசருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏ.டி.எம்.,களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்ப, வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது, வங்கிகள் கொடுத்தனுப்பும் கடிதத்தில், 'க்யூஆர்' கோடு நிச்சயம் இருக்க வேண்டும்.
'க்யூஆர்' கோடு-ஐ பறக்கும் படை அதிகாரிகள் ஸ்கேன் செய்து, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வர். 'க்யூஆர்' கோடு, அக்கடிதத்தில் இல்லாவிட்டால், பணம் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போஸ்டர் ஒட்டுவதற்கு தடை!
அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் நிறுவன உரிமையாாளர்களுடன் தேர்தல் தொடர்பான விளம்பர துண்டுபிரசுரங்கள், போஸ்டர் அச்சடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் தொடர்பான பிரசுரங்கள் அச்சடிக்கும்போது, அதன் நகலை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அச்சகத்தின் பெயர் மற்றும் தொடர்பு எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். எந்த வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி அச்சடிக்க ஆர்டர் கொடுத்தது; எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டது என்கிற விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. தனியாருக்கு சொந்தமான இடங்களில் ஒட்டினாலும், முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தினர்.

