/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருங்கைக்காய் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி
/
முருங்கைக்காய் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி
ADDED : மே 19, 2025 11:21 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) --- 180, ஒரு தேங்காய் -- 33, கத்தரிக்காய் கிலோ - 27, முருங்கைக்காய் --- 60, வெண்டைக்காய் --- 30, முள்ளங்கி --- 18, வெள்ளரிக்காய் --- 38, பூசணிக்காய் --- 10, அரசாணிக்காய் --- 8, பாகற்காய் --- 55, புடலை --- 18, சுரைக்காய் --- 10, பீர்க்கங்காய் --- 45, அவரைக்காய் --- 90, பச்சைமிளகாய் --- 25 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வார்த்தை விட, ஒரு தேங்காய் - 4, முருங்கைக்காய் கிலோ -- 40, வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் --- 5, பச்சை மிளகாய் -- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.
இதே போன்று, தக்காளி (15 கிலோ பெட்டி) -- 10, கத்தரிக்காய் - 5, வெள்ளரிக்காய் --- 13, பீர்க்கங்காய் மற்றும் அவரைக்காய் -- 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது, 'கடந்த வாரமே காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது. தற்போதும் வரத்து குறைவாகவே உள்ளது. பீட்ரூட் வரத்து இல்லை. முருங்கைக்காய் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். அடுத்த வாரமும் இதே நிலை நிலவும்,' என்றனர்.