/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 28, 2024 06:22 AM

கோவை: ஈஷா யோகா மையம் மற்றும் அதன் நிறுவனர் சத்குரு மீது, அவதுாறு பரப்பும் நபர்களை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது: ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, சமூக பணிகளை செய்து வருகிறது.
அதன் நிறுவனர் சத்குரு, மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக உதவி வருகிறார். மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி, கிராம மேம்பாடு உள்ளிட்டவற்றை அளித்து வருகிறார்.
இந்திய அளவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு, சேவையாற்றி வரும் மாமனிதர் சத்குரு. அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால், கம்யூ., மற்றும் திராவிட கட்சிகள் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால், உண்மையாகிவிடாது. தமிழக அரசுக்கு ஈஷா வாயிலாக பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன.
பல தி.மு.க., அமைச்சர்கள் ஈஷாவின் சேவைகளை பாராட்டியுள்ளனர். ஆனால், தி.மு.க.,வினரால் காப்பாற்றப்படும் ஒரு சில அமைப்புகள், நபர்கள் இது போன்ற அவதுாறுகளை பரப்பி வருகின்றனர்.
சத்குரு குறித்து தவறாக பேசுவதை, தமிழக அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. சத்குரு மற்றும் ஈஷா யோகா மையத்திற்கு களங்கம் விளைவித்தால், இந்து மக்கள் கட்சியினர் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகன், அமைப்புக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, அமைப்புக்குழு பொது செயலாளர் செந்தில், மாவட்ட பொது செயலாளர் சூர்யா, மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார் பாலாஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.