/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு அமைப்பாளருக்கு பிரிவுபசார விழா
/
சத்துணவு அமைப்பாளருக்கு பிரிவுபசார விழா
ADDED : டிச 09, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில், சத்துணவு அமைப்பாளராக, 36 ஆண்டுகள் பணிபுரிந்த, மருதன் கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு இதுவரை, அன்னுார் ஒன்றியத்தில், மூன்று அமைப்பாளர்கள், மூன்று சமையலர்கள் என ஆறு பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மருதனுக்கு பிரிவு உபசார விழா அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில் மருதனை பாராட்டி, கவுரவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.