/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைபெறும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்! மாற்று இடத்துக்கு மாற்ற போலீசார் தீவிரம்
/
விடைபெறும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்! மாற்று இடத்துக்கு மாற்ற போலீசார் தீவிரம்
விடைபெறும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்! மாற்று இடத்துக்கு மாற்ற போலீசார் தீவிரம்
விடைபெறும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்! மாற்று இடத்துக்கு மாற்ற போலீசார் தீவிரம்
ADDED : மே 23, 2025 12:33 AM

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், 43 ஆண்டுகளாக செயல்படும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
பொள்ளாச்சியில், கடந்த, 1966ம் ஆண்டு மேற்கு போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. கடந்த, 1982ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டடம் அருகே மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஆறு பள்ளிகள், இரண்டு கோவில்கள், ஐந்து மசூதிகள், மூன்று சர்ச்சுகள் உள்ளன.
தாய் கிராமங்கள் இரண்டு, நான்கு குக்கிராமங்கள், 13 வார்டுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசாருடன் செயல்படுகிறது.
மேலும், இந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் செயல்பட்டு வந்தது. மகாலிங்கபுரத்துக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் புதியதாக கட்டடம் கட்டப்பட்டு மாற்றப்பட்டது.அதன்பின், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
கடந்த, 43 ஆண்டுகளாக செயல்படும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக, 76.15 கோடி ரூபாய் செலவில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்காக, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டப்பட்ட இடம் அருகே உள்ள காலியிடமாக மேற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்படும் இடம் கருதப்படுவதால், ஸ்டேஷனை மாற்று இடத்துக்கு மாற்ற, காவலர் வீட்டு வசதி வாரியம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாடகை கட்டடத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் மாற்றுவதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
போலீசார் கூறுகையில், 'மேற்கு போலீஸ் ஸ்டேஷன் காலி செய்யப்பட உள்ளது. இதற்காக, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனையொட்டி வாடகை கட்டடத்துக்கு விரைவில் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
மேலும், நகராட்சிக்கு உட்பட்ட சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டேஷன் கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வாயிலாக கேட்கப்பட்டுள்ளது. அதே போன்று போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடம் கோரப்பட்டுள்ளது. இடம் கிடைக்கும் வரை, வாடகை கட்டடத்தில் செயல்படும்,' என்றனர்.