/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணை கொள்முதல்; இளநீர் விலை சரிவு
/
பண்ணை கொள்முதல்; இளநீர் விலை சரிவு
ADDED : அக் 28, 2024 11:41 PM
பொள்ளாச்சி : ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 37 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 14,750 ரூபாய்.
புதுடில்லி, குர்கான், பீகார், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால், இளநீர் தேவை அதிகமாக உள்ளது.
தற்போது, தீபாவளி காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்ப முடியாது என்பதால் லாரிகளை வடமாநிலங்களுக்கு இயக்க எவரும் முன்வருவதில்லை. தேவை அதிகமாக உள்ளபோதும், இளநீர் அனுப்ப முடிவதில்லை. இச்சூழல், தீபாவளி பண்டிகை முடிந்ததும், ஓரிரு நாட்கள் வரை இதே நிலை நீடிக்கும். இவ்வாறு, கூறினார்.