தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


UPDATED : ஜூன் 17, 2026 10:00 PM

ADDED : ஜூன் 17, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 10:00 PM ADDED : ஜூன் 17, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 54, விவசாயி. இவர், கடந்த 2021ம் ஆண்டு தென்னை மரம் ஏறிய போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனால் இவருக்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக உடல் உபாதைகள் அதிகமானதால் மன உளைச்சலில் இருந்தார்.

குடும்பத்தினர், ஜூன் 16 சந்திராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது, தனிமையில் இருந்த சுப்ரமணி வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர், சுப்ரமணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து குடும்பத்தினருக்கும், கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுப்ரமணியன் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us