/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'
/
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'
ADDED : ஏப் 03, 2025 05:26 AM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது. விவசாயிகள் ஒவ்வொருவராக தங்களது கோரிக்கைகளையும், குறைகளையும் கூறினர்.
மதுக்கரை குமிட்டிபதி பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும், சிறுத்தையை பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், கூண்டுவைத்து பிடிக்கவும், கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி பேசுகையில், ''சிறுத்தை பிரச்னை குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக்கூட்டத்தில், கோரிக்கை வைத்தோம். அப்போது எந்த அதிகாரிகளும் வரவில்லை. வராத அதிகாரிகளுக்கு, 'மெமோ' கொடுக்க வலியுறுத்தினோம். அவர் மெமோ கொடுத்தாரா இல்லையா என்பதை தெரிவிக்கவே இல்லை,'' என்றார்.
அப்போது கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார், ''கூட்டத்துக்கு வராத அதிகாரிகளுக்கு மெமோ கொடுத்திருக்கிறேன்,'' என்றார்.
மெமோ சென்றடைந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய கலெக்டர், இனி ஒவ்வொரு அதிகாரியும், தவறாமல் குறைதீர் கூட்டத்துக்கு வர வேண்டும்; தவறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நடவடிக்கையை, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறை தீர் கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்தார்த், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.