/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாக்கு நாற்றுகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
/
பாக்கு நாற்றுகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 21, 2024 04:30 AM
மேட்டுப்பாளையம், : வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து, கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் பாக்கு நாற்றுகளை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை அதிகாரிகள் கூறுகையில், ''கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய மொஹித் நகர் மற்றும் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1 அடி, முதல் 2 அடி உயரத்திலும் பாக்கு நாற்றுகள் உள்ளது. ஒரு பாக்கு மர நாற்றின் விலை ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து, விவசாயிகள் ஆர்வமுடன் பாக்கு நாற்றுகளை வாங்கி செல்கின்றனர். பாக்கு நாற்றுகளை வாங்க தொடர்புக்கு 8526371711, 9629456181,'' என்றனர்.-

