/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 29, 2024 01:48 PM

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகள் என ஆறு ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்க உள்ளதாக டிட்கோ கடந்த 2021ல் அறிவித்தது.
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக நீலகிரி எம்பி ராஜா மற்றும் டிட்கோ அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டிட்கோ அறிவித்த 3850 ஏக்கரை விற்க முடியாது வாங்க முடியாது அடமானம் பெற முடியாது என பத்திரப்பதிவுத்துறை அறிவித்தது.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் மற்றும் நமது நிலம் நமதே அமைப்பினர் எல்.கோவில் பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். எந்த அரசு உத்தரவும் இல்லாமல் பத்திரப்பதிவை நிறுத்தியது ஏன் அரசின் உத்தரவை காண்பிக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து முகாம் நடைபெறும் மண்டபத்தில் நுழைவாயிலில் உட்கார்ந்து அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர் .இதனால் பொதுமக்கள் மனு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது