sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பெயரளவில் நடந்த கிராம சபை கூட்டங்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

/

 பெயரளவில் நடந்த கிராம சபை கூட்டங்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

 பெயரளவில் நடந்த கிராம சபை கூட்டங்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

 பெயரளவில் நடந்த கிராம சபை கூட்டங்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்


ADDED : பிப் 01, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு, காட்டுப்பன்றி தொல்லை, மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னைகள், பாசனக் குட்டை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டன.

முக்கிய கோரிக்கைகள் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு பெற 'தட்கல்' முறையில் முழுத் தொகையையும் செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு சார்பில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

விவசாயிகளின் குறைகளுக்கு கிராம சபை கூட்டங்களிலேயே தீர்வு காண வேண்டும். ஆனால் கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. கிராம சபை கூட்டங்கள் சரிவர நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

குடியரசு தினத்தையொட்டி நடந்த, பல கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. பெயரளவில் மட்டுமே கூட்டங்கள் நடத்தப்பட்டன. பத்தாயிரம் பேர் வசிக்கும் ஊராட்சிகளில் பத்து பேரை வைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

இவ்வாறு, கோரிக்கைகளை முன்வைத்தனர்.






      Dinamalar
      Follow us