/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 24, 2024 06:59 AM
பெ.நா.பாளையம்; வேளாண் நிலத்தில் பயிர் சேதத்தை ஏற்படுத்தி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் பிடிக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், வேளாண் நிலங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்கை உபாதை கழிக்க செல்லும் மனிதரை கொடூரமாக தாக்குகிறது.
மனிதர்கள், நாய்கள் இருந்தும் எதிர்ப்பு காட்டியும் காட்டுப்பன்றிகள் தாக்குதலை நிறுத்துவதில்லை. தோட்டங்களில் தங்கி வேளாண் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாய தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழக வனத்துறையினர் பாம்பு, சிறுத்தை போன்ற விலங்குகளை வந்து பிடித்து செல்வது போல, காட்டுப் பன்றிகளையும் பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளனர்.